வியாழன், 31 மார்ச், 2011

தேர்தல் கவிதைகள்

வடிவேல் பிரச்சாரம் ..
சங்கமே நஷ்டத்துல
போய்ட்டு இருக்கு
இதுல கைப்புள்ள
வேறயா ?

இலவசம் ...
இனி கலைஞர் எடுக்கும் படங்களுக்கு
சீட்டு இலவசம்
( மக்களே இனி இலவசம் கேட்பீங்க )

இத்தனை நாட்களாக
கஷ்டப்பட்டு நம்
தலையில் அரைத்துக்
கொண்டிருந்த
மிளகாயை நமக்கு
நாமே அரைத்துக்
கொள்ளத்தான்
இலவச மிக்சி
கிரைண்டர் திட்டம்

யானையை யாசகம்
கேட்கவைகும்
சமூகத்திடம்
இலவசத்திற்கு மயங்கி
ஓட்டுப் போடாதே
என்பது வீண் முயற்சி
( ஆனந்த விகடனில்
இருந்து தொகுத்தது)

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

திங்கள், 13 டிசம்பர், 2010

எம்.பி எனும் ஏழைகள் !

இட்லி 4ரூ
தோசை12ரூ
சாப்பாடு 30ரூ டீ4ரூ
என்று கடைகளில்
சாப்பிட்டுக்
கொண்டிருக்கும்
தமிழக மக்களுக்கு
ஒரு நற்செய்தி

இந்தியாவிலேயே
குறைந்த செலவில்
உணவு கிடைக்கும்
இடம் ஒன்று உள்ளது
அங்கு டீ 1ரூ
சோப்பு 5.50 ரூ
சாப்பாடு 2 ரூ
சப்பாத்தி 1ரூ
சிக்கன் 24.50ரூ
தோசை 4ரூ
காய்கறிபிரியானி 8ரூ
மீன் 13ரூ
இந்த இடத்தில்தான்
இந்தியாவின் மொத்த
ஏழைகளும் சாப்பிடு
கிறார்கள்

அந்த ஏழைகளின்
மாத சம்பளம்
எவ்வளவு தெரியுமா ?
80,001

அந்த ஏழைகள் யார்
தெரியுமா ?
இந்திய நாடாளுமன்ற
உறுப்பினர்கள்

உணவு கிடைக்கும்
இடம் நாடாளுமன்ற
உணவகம்

என்ன எல்லோரும்
நாடாளுமன்ற
உறுப்பினர் ஆக
தயார்ஆயிட்டீங்களா?

இதை
குறுஞ்செய்தியாக
ஒரு தோழர் காலை
அனுப்பியிருந்தார்
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

வியாழன், 9 டிசம்பர், 2010

மரச்சிற்பங்கள்

தேழர்களே ...
நம் வீடுகளில் வரவேற்பறையை
அலங்கரிக்கவும்
குழந்தைகள் விளையாடவும்
மரத்தினாலான
பொம்மைகள்
வாங்குவீர்கள்
செலவும் அதிகம்
பிடிக்கும்

இதோ நீங்களே
செய்யும்படியான சில
எளிமையான மாதிரிகள்

உதிரிபாகங்களாக
செய்து அவைகளை
குழந்தைகளுக்கு
விளையாட
கொடுப்பதால்
பாகங்களை
இணைத்து உருவங்களை
உருவாக்குவதால்
குழந்தைகளின் அறிவும்
வளர்சியடைகிறது

முயற்சி செய்து
பாருங்கள்

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

புதன், 1 டிசம்பர், 2010

மரச்சிற்பங்கள்மரச்சிற்பங்கள்

நீங்கள் கலைஞரா புதிதாக ஏதேனும் படைக்க வேண்டும் என்ற ஆர்வம்
உடையவரா

இதோ
உங்கள் குழந்தை விளையாட மரத்தினால் ஆன பொம்மைகளுக்கான
மாதிரிகள்

இந்த மாதிரிகளைப்
பார்த்து நீங்களே
உங்கள் அன்பு பாப்பாவுக்கு செய்து
கொடுங்கள்
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

சனி, 30 அக்டோபர், 2010

வாக்காளர்பட்டியலில் உங்கள் பெயர்பார்க்க

நாம் வாக்காளர் பட்டியலில்
பெயர்சேர்க்கவும்
எழுதிக் கொடுத்த பெயர் பட்டியலில்
இடம் பெற்றதா என்று
அறியவும் நாம் படாதபாடு பட்டிருக்கிறோம் இனி
கவலை வேண்டாம்

தேர்தல் ஆனையம்
வாக்காளர் பட்டியலை
இனையத்தில் வெளிவிட்டிருக்கிறது
இதன்மூலம் நம் பெயரை சரிபார்த்துக்
கொள்ளலாம்
முகவரி இதோ
www.elections.tn.gov.in/eroll/
( இதை கிளிக் செய்க )
இதில் முதலில்
மாவட்டம் பின் தொகுதி பெயரை கொடுக்க ஒரு அட்டவனை வரும் அதில் வாக்காளர்
பெயர், தாய் , தந்தை,
கணவர் பெயர்களை கொடுக் பட்டியலில் நம் பெயர் முகவரி
வாக்குச்சாவடி பெயர் என அனைத்து விவரங்களும் வருகிறது

தேர்தல்
ஆனையத்திற்கு நன்றி
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

புதன், 6 அக்டோபர், 2010

தபூ சங்கர் கவிதைகள்

நான் வழிபட இந்த
உலகத்தில்
எத்தனையோ கடவுள்
இருக்கின்றது
ஆனால் நான்
காதலிக்க இந்த
உலகத்தில் நீ மட்டும்
தான் இருக்கிறாய்

சிந்தும் மழை மீண்டும்
மேகத்துக்குள் போவது
இல்லை ஆனால்
நீ சிந்தும் வெட்கம்
மெல்லாம் மீண்டும்
உன்
கன்னத்துக்குள்ளேயே
போய்விடுகிறது

என் சின்ன இதயத்தில்
உன்னை எப்படி குடி
வைக்கப் போகிறேன் என்றிருந்தேன்
நீ உள்ளே நுழைந்ததும்
என் இதயம்
பெரியதாகி விட்டது

நில உச்சவரம்பு
சட்டம் போல
அழகு உச்ச வரமபுச்
சட்டம் பேட்டுத்தான்
உன் அழகின்
கொட்டத்தை அடக்க
வேண்டும்

புதிய புடவை
எப்படி இருக்கு
என்றாய்
நல்லா இல்லனு
சொல்லு என்று
கெஞ்சியது நீ
களைந்து கொடியில்
போட்டிருந்த புடவை

நீ முகம் கழுவுகையில் ஒடிய
தண்ணீரைப் பார்த்து
திடுக்கிட்டு விட்டேன்
நான் ஒவ்வொரு
நாளும் இவ்வளவு
அழகையா வேண்டாம்
என்று நீ நீரில்
விடுகிறாய்

இந்தக் காதல் கடிதம்
கொண்டு வருபவனைக்
காதலிக்கவும்
இவன் உனக்காகப்
படைக்கப்பட்டவன்
இப்படிக்கு
இறைவன்

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com